Perhentian island

0 Comments

கடல் கரையோடு கலக்கும் இடமே அழகான இடம் அதனால்தான் எந்த சுற்றுலா தளமும் கடலுக்கு நடுவில் அமைந்திருப்பது இல்லை கடற்கரையின் பெயராலேயே அழைக்கப்படுகிறது ஆனால் முதன்முறையாக கடற்கரையை விட ஒரு கடல் அழகாக இருந்தது அதுதான perhentian தீவு ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை இவை கடலுக்கு நடுவில் போட்டுவிட்டு எட்டிப்பார்த்தால் 20 அடி ஆழத்தில் இருக்கும் அந்த நாணயம் தெள்ளத்தெளிவாக தெரியும் அந்த அளவிற்கு ஒரு தெளிவான கடல்

அவ்வளவு அழகான கடலை அதற்கு முன் நான் பார்த்ததில்லை அந்த தீவில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் அந்தத் தீவில் சாலைகள் கிடையாது காவல் நிலையம் கிடையாது மருத்துவமனை கிடையாது ATM கிடையாது நாம் தங்கும் விடுதிகளும் உணவகங்களும் மட்டுமே இருக்கும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போக வேண்டுமென்றால கூட நீங்கள் படகை தான் வாடகைக்கு எடுத்துச் செல்ல முடியும் இந்த ஒரு காரணத்தினால்தான் அவர்கள் அந்தக் கடலையும் கடலை ஒட்டிய இடங்களையும் அத்தனை பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் என் குழந்தைகளுடன் இங்கு ஒரு நாள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமே சென்றேன் ஆனால் அந்த இடத்தின் அழகில் மயங்கிப் போய் நான் ஒரு நாள் என் பிள்ளைகள் ஒரு நாள் என் மனைவி ஒரு நாள் என ஒவ்வொரு நாளாக அதிகரித்துக் கொண்டே சென்று 4,5 நாட்கள் அங்கேயே இருந்தேன்.மற்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது ஒரு மியூசியம் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம் இருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடம் இருக்கும் இப்படி பாதிக்குமேல் மனிதனால் உருவாக்கப்பட்ட இடங்களாக தான் இருக்கும் ஆனால் இந்த தீவில் நான் சென்ற ஒவ்வொரு இடங்களும் இயற்கையானவை எனக்கு புதுமையான வையும் கூட கடலில் என செல்ல முடியும் இங்கு நிச்சயம் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது என்ற எண்ணத்தோடு சென்ற எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது

முதல் நாள் சுறா பார்க்கச் சென்றோம் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் பின் சுறாமீன் இருக்கும் தைரியமாக அதனுடைய பல்லைப் பிடுங்க கண்ணாடிக்கு இந்தப்பக்கம் இருந்து பல முறை முயற்சி செய்திருக்கிறோம் ஆனால் கடலுக்குள் குதித்து பக்கத்தில் சுறாவை பார்த்த அனுபவம் நானும் ஏதோ பணம் பிடுங்குவதற்க்காகத்தான் இவர்கள் சுறாவுடன் நீந்தக் அழைத்துச் செல்கிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் உள்ளே குதித்த பின் சுறாவை கடலுக்கு அடியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பொழுது பக்கத்தில் பார்த்த அந்த நொடி பகீரென்று இருந்தாலும் ஒரு மிகப்பெரிய சிலிர்ப்பை எனக்கு கொடுத்தது அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவே எனக்கு அரைநாள் தேவைப்பட்டது அதன்பின் கடல் ஆமைகள் கடற்கரை என்று ஒரு கடற்கரை அங்கே சென்று படகிலிருந்து குதித்து சிறிது நேரம் நீந்தி விளையாடி விட்டு யாருமே சொல்லவில்லை நான் நினைத்தேன் கடற்கரையின் பெயர் கடலாமை கடற்கரை Turtle Beach என்று நீந்தும் உபகரணங்களை அணிந்து கொண்டு கடலுக்கு அடியில் சென்று பார்த்த பொழுது தான் மிகப்பெரிய பாறைகளின் அளவிற்கு கடல் ஆமைகள் கிடப்பது தெரிந்தது

இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே செல்லலாம் அங்கு படகை செலுத்துபவர்கள் நம் பைக்கை செலுத்துவது போல அவ்வளவு சாதாரணமாக செலுத்துகிறார்கள். அந்த அலைகளில் குதித்து குதித்து செல்லும் பொழுது முதல் நாள் அடி வயிற்றைக் கலக்கி கலக்கி வெளியே காட்ட முடியாமல் அமர்ந்திருந்தது இரண்டாவது நாள் பழகிய பிறகு அந்த கடல் காற்றில் அந்த ஆலைகளில் குதித்து குதித்து அந்த படகு சென்றது அப்படி ஒரு அலாதியான அனுபவத்தை எனக்கு கொடுத்தது என கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்திற்கு பழக ஆரம்பித்தேன். நான் அங்கிருந்து கிளம்பும் நான்காவது நாள் நல்ல மழை கடல் முழுவதும் மழை பெய்து நான் கிளம்ப சிறிது நேரம் எடுத்துக் கொண்டபோது அந்த கடற்கரையில் அருகிலுள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தபடி இங்கேயே தங்கி விடலாமா என்று கூட தோன்றியது எல்லா சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் பொழுதும் அடுத்து என்ன வேலை என்ற எண்ணமும் சிறிது அசதியும் இருக்கும் ஆனால் இங்கிருந்து வரும்பொழுது எனக்கு ஏன் என் பிள்ளைகளுக்கு கூட எதையோ மிகவும் பிடித்த எதையோ விட்டு விட்டு வருவதை போல இருந்தது . இங்கேயே இருந்தால் உன் அழகு என்னை இவ்வளவு பாதிக்காது அதனால் உன் நினைவுகளை நீ கொடுத்து அனுபவங்களை மனதோடு எடுத்துச் செல்கிறேன் மறுபடி உன்னை பார்க்க வருவேன் என் அழகிய தீவே

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *