தாய்லாந்து{phuket}

0 Comments

புக்கட் தாய்லாந்தில் இருக்கும் ஒரு மிக முக்கியமானத் தீவு இது தாய்லாந்து சம்பந்தப்பட்ட முதல் பதிவு என்பதால் முதலில் தாய்லாந்தைப் பற்றியும் தாய் மக்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். பொதுவாக தாய்லாந்தை பற்றி நம் நாடுகளில் முக்கியமாக இந்தியாவில் உள்ள அபிப்பிராயம் என்னவென்றால் அது மசாஜ் சென்டர்கள், sex tourism, இரவு வாழ்க்கை, போதை மனிதர்கள், ஒரு பாதுகாப்பற்ற இடம் என்பது தான். ஆனால் 2018 வரை உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளில் முதல் மூன்று இடத்தில் தாய்லாந்தும் ஒன்று அதைவிட நான் பல நாடுகள் சுற்றி இருக்கிறேன் நான் பார்த்த மக்களிலேயே மிகவும் தோழமையான மக்கள் தாய்லாந்து மக்கள் தான் அழகான இடங்கள் எல்லா ஊரிலும் இருக்கும் ஒரு 30% மீதி 70% இயந்திரமயமாகி இருக்கும்ஆனால் தாய்லாந்தில் 30 சதவீதம் மட்டுமே இயந்திரமயமாகி இருக்கும் மீதி 70% இயற்கையோடு ஒன்றிய அழகான இடங்கள் நிறைந்திருக்கும் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை தாய்லாந்தில் எந்த எம்என்சி கம்பெனிகளுக்கும் அனுமதி இல்லை எந்த ஃபாஸ்ட்ஃபுட் நிறுவனங்களுக்கும சுற்றுலா இடங்களைத் தவிர வேறு எங்கும் அனுமதி கிடையாது இப்படி இயற்கையையும் இயல்பையும் பேணிப் பாதுகாக்கும் அன்பான மக்கள் தாய் மக்கள் மேற்சொன்ன அபிப்பிராயம் இந்தியர்களுக்கு வருவதற்கு முக்கியமான காரணம் தாய்லாந்து சுற்றுலா என்று சொன்னவுடனே இவர்கள் செல்லும் இடம் பட்டாயா அல்லது phuket இந்த இரு இடங்களும் மிக அழகான இடங்கள் என்றபோதிலும் இந்த இடங்களை அந்த நாட்டு அரசாங்கம் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு காகவும் சுற்றுலாவுக்காக ஒதுக்கியுள்ளது. இங்கு தாய் மக்களை விட வெளிநாட்டினர் தான் அதிகமாக இருப்பார்கள் இது போன்ற இடங்களில் மட்டுமே குடியும் கூத்தும் கேலியும் பெண்களும் மலிந்து காணப்படும் நாம் 70 சதவீத இடத்தை விட்டுவிட்டு தேடித்தேடி இதுபோன்ற ஓரிரண்டு இடங்களுக்கே செல்வதால்தான் இந்த அபிப்ராயம்

சரி இப்பொழுது phuket தீவுக்கு வருவோம் நான் முன்பு ஒரு கட்டுரையில் கோவளம் கடற்கரையை பற்றி கூறி இருப்பேன் அது போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கடற்கரைகளை கொண்டதுதான் இந்த புக்கட் தீவு

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *