அரூர் காடு சின்னப்பையனா இருக்கும்போது நான் முதன்முதலில் வேட்டைக்கு போன இடம் வேட்டை என்றால் மான், புலி, சிங்கம் அதெல்லாம் கிடையாது. பொன்வண்டு பிடிப்பதற்காக என்னுடைய நண்பர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்துக் கொண்டு அருகிலிருக்கும் அந்த அடர்ந்தக் காட்டுக்குள் காட்டைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அதில் இருக்கும் எந்த அபாயமும் தெரியாமல் சர்வசாதாரணமாக காலையில் சென்றால் மாலை வரை அதனுள்ளே சுற்றித்திரிந்து கண்ணில்படும் பழங்களை எல்லாம் உண்டு மானுக்கு வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தி இரண்டு மூன்று பொன்வண்டுகள் பிடித்துக்கொண்டு பள்ளியில் இருந்து வருவது போல வீடு திரும்பி விடுவோம்.
என்னுடைய ஒவ்வொரு வயதிலும் அந்தக் காட்டை ஒவ்வொரு விதமாக நான் உபயோகப் படுத்தி இருக்கிறேன் எங்கள் ஊரை சுற்றி பெரிதாக வேறு எதுவும் கிடையாது எந்தக் கேளிக்கைக்கும் இடம் கிடையாது எந்தப் பொழுது போக்குக்கும் வழி கிடையாது ஒன்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவோம் இல்லையென்றால் அதே நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு காட்டுக்குள் செல்வோம்.
எங்கள் ஊர் மக்கள் அந்தக் காட்டை பலவிதமாகப் பயன்படுத்தினர் விறகு வெட்டும் இடமாக, விபச்சார விடுதியாக, வேட்டைக்கு அரசாங்கம் தடை விதிக்கும் முன்பு காட்டுப் பன்றிகளுக்கும் கலை மானுக்கும ஈட்டி முதல் துப்பாக்கி வரை ஏந்தியபடி இரவு முழுவதும் அந்த காட்டிற்குள் அலைந்தவர் ஏராளம் ஆனால் அந்த வயதில் அந்தக் காட்டை நான் உபயோகித்தது என்னவோ நான் மேற்சொன்ன காரணத்திற்காக மட்டும்தான். இப்படி அவரவர் தேவைக்கேற்ப அவரவர் வயதிற்கேற்ப அந்தக் காட்டை உபயோகப் படுத்தினார்கள் வயது பேதமின்றி வேறொரு விஷயத்திற்காகவும் இந்த காட்டை மொத்த ஊரும் பயன்படுத்தியது எதுவாக தெரியுமா பொது கழிப்பிடமாக!!
நான் கல்லூரி செல்லும் வரை இக்கட்டுரையில் எழுத முடியாத பல விஷயங்களை அந்தக் காடு மட்டுமே அறிந்திருந்தது துணிவிருந்தால் தொடர்ந்து அதை எழுதுகிறேன்