நாட்கோழி ரோஷ்ட்
தேவையான பொருட்கள்
நாட்கோழி 300 கிராம்
அரிசி மாவு 3 மேஜைக்கரண்டி
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
மசாலா கலவை :
இஞ்சி 4 இன்ச் சோலுரித்தது
பூண்டு 10 பற்கள்
தயிர் 1 கப்
மிளகாய் தூள் 1.5 மேஜைக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
1. இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து இஞ்சி-பூண்டு விழுதை தயார் செய்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் அனைத்து மசாலா கலவை பொருட்களை எண்ணெய்யை தவிர்த்து எடுத்து கலந்து கொள்ளவும்.
3. இந்த மசாலா கலவையை முதலில் தயிர் , பொடி வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும், இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும், எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளவும் .
4. இப்பொழுது சிக்கன் துண்டுகளை இந்த மசாலா கலவையில் ஒன்றாக பிரட்டி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
5. 4 மணி மணித்திற்கு பிறகு இந்த சிக்கன் மசாலா கலவையை பிரஷர் குக்கரில் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஊற்றி குக்கரின் மூடிவைத்து தேவையான அளவு விசில் விட்டு சிக்கனை வேகவைத்து கொள்ளவும். ( சிக்கன் கறிக்கு தகுந்தார் போல் குக்கர் விசில் மாறுபடும் ).
6. இப்பொழுது சிக்கன் துண்டுகள் வெந்து விட்டது. அதனை ஒரு அகன்ற தட்டத்தில் எடுத்து வைக்கவும்.
7. பிறகு அரிசி மாவை வெந்த சிக்கன் கலவையின் மீது தூவவும். அரிசி மாவை நன்கு கலக்கவும்.
8. ஒரு வடைச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான எண்ணெயை ஊற்றவும்.
9. எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை நன்கு எண்ணெய்யில் பொடித்து எடுக்கவும்.

Leave a Reply