ஆப்பம் செய்யும் முறை

ஆப்பம் செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

ஊற வைக்க:

பச்ச அரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – கால் கப்

சேர்த்து அரைக்க:

சாதம் – ஒரு கை பிடி
தேங்காய் துருவல் – கால் மூடி

செய்முறை :

ஊற வைக்கவேண்டியவைகளை இரவு ஊற போட்டு காலையில் அரைக்கவும், அல்லது காலையில் ஊற போட்டு மாலையில் அரைக்கவும்.

ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக நறுக்கி சுற்றி முழுவதும் தடவவும்.

அப்பதான் ஒட்டாமல் வரும்.

ஊற்றும் போது தீயை அதிகமாக வைக்க வேண்டும். கையில் பிடித்து சுழற்றி தீயை குறைத்து வைத்து ஐந்து நிமிடத்திற்குள் வெந்துவிடும்

சுழற்றி விட்டு இட்லி சட்டி மூடி போட்டு (அ) குப்பி மூடி போட்டு மூட வேண்டும்.

இரண்டு கை பிடியிலும் தனித்தனியான சின்ன துணியாக பிடித்து கொள்ளவும். பெரிய துணி என்றால் கேஸ் அடுப்பில் மாட்டி தீ பிடிக்கும் அபாயம் இருக்கு.

எண்ணெய் இல்லாத உணவு இது

குறிப்பு

வெந்தயம் சேர்ப்பது மொறுகலாக சிவக்க, ஜவ்வரிசி, சாதம் சேர்ப்பது பஞ்சு போல் வருவதற்கு. எல்லா வகையான குருமாக்களுக்கும் இது பொருந்தும். முட்டை வட்டலாப்பம் ரொம்ப நன்றாக இருக்கும். தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவலை சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கூட சேர்க்கலாம்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *